பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2025-02-02 12:16 GMT

 திண்டுக்கல்லில் இருந்து அரவக்குறிச்சி வழியாக கரூர் செல்லும் பஸ்களும், கரூரிலிருந்து திண்டுக்கல் செல்லும் பஸ்களும் மற்றும் அரவக்குறிச்சி வழியாக தாராபுரம் செல்லும் பஸ்களும் ஏ.வி.எம். கார்னரில் கரூர் ரோடு திண்டுக்கல் ரோடு, தாராபுரம் ரோடு ஆகிய பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று சென்று கொண்டிருக்கிறது. இந்த 3 இடங்களிலும் பயணியர் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் பஸ் ஏறுவதற்காக வெயில், மழையில் நின்று தான் செல்கின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ- மாணவிகள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். எனவே அரவக்குறிச்சியில் ஏ.வி.எம். கார்னர் பகுதியில் கரூர், தாராபுரம், திண்டுக்கல் ஆகிய பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்