விபத்து ஏற்படுத்தும் இரும்பு தடுப்புகள்

Update: 2025-02-02 12:12 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பகுதிக்கு உட்பட்ட திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த இரும்பு தடுப்புகளில் இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மோதி விபத்தில் சிக்குகின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தேவையற்ற இடங்களில் உள்ள இரும்பு தடுப்புகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி