கருமத்தம்பட்டி அரசு போக்குவரத்துக்கழக கிளை சார்பில் சோமனூர் பஸ் நிலையத்தில் இருந்து மங்களம் வழியாக திருப்பூர் பழைய பஸ் நிலையத்துக்கு 5, 5A, 5B, 5C, 5D, 14 ஆகிய எண்கள் கொண்ட அரசு பஸ்கள் சென்று திரும்புகின்றன. இந்த பஸ்களை கருமத்தம்பட்டி வழியாக செல்லும் வகையில் நீட்டிக்க வேண்டும். இதன் மூலம் அதில் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை மேலும் உயரும். போக்குவரத்துக்கழகத்துக்கும் வருமானம் கிடைக்கும். கருமத்தம்பட்டி சுற்றுவட்டார பகுதி மக்களும் பயன் பெறுவார்கள். அதற்கு நடவடிக்கை எடுப்பார்களா?.