கிருஷ்ணகிரி நகரில் 5 ரோடு ரவுண்டானா அருகில் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக பஸ்கள், ஆட்டோக்கள் நீண்ட நேரமாக நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ரவுண்டானாவில் சிக்னல் கிடைத்தும் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே 5 ரோடு சந்திப்பு பகுதியில் பெங்களூரு சாலை, காந்தி சாலை, சேலம் சாலை, சென்னை சாலை பகுதியில் பஸ், ஆட்டோக்கள் நீண்ட நேரம் நிறுத்தி வைப்பதை தடுக்க போக்குவரத்து பிரிவு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நூர்ஜகான், கிருஷ்ணகிரி.