தூத்துக்குடி முள்ளக்காடு முதல் பழையகாயல் ஜிர்கோனியம் வரையிலும் சாலையின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளை முட்செடிகள் பதம் பார்க்கின்றன. திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கும் சிரமமாக உள்ளது. எனவே சாலையோர முட்செடிகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.