போக்குவரத்து நெரிசல்

Update: 2025-01-12 16:33 GMT

கிருஷ்ணகிரி நகரில் சென்னை சாலை, பெங்களூரு சாலை, சேலம் சாலையில் பகல் நேரங்களில் சரக்கு லாரிகள் நீண்ட நேரம் நிறுத்தப்படுகின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக இந்த சாலைகளில் உள்ள பஸ் நிறுத்தங்களில் தனியார் பஸ்கள் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதே போல ஆட்டோக்களும் இந்த பகுதியில் நீண்ட நேரம் சாலையில் நிறுத்தப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகிறார்கள். எனவே கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானாவை சுற்றி உள்ள சாலைகளில் பஸ் நிறுத்தங்களில் வாகனங்கள் நீண்ட நேரம் நிற்காத வகையில் போலீசார் கண்காணிக்க வேண்டும்.

-சந்தோஷ், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்