புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையிலிருந்து வடக்குத்தொண்டைமான்ஊரணி வரை செல்லும் சாலையில் தெற்குத்தொண்டைமான்ஊரணி பிரிவு சாலை அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த நிழற்குடை இடிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.