வில்லியனூரில் இருந்து கூடப்பாக்கம், பத்துகண்ணு செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் சாலை கரடு முரடாக உள்ளது. இதனால் தண்டவாளத்தை கடந்து செல்வதில் சிரமம் உள்ளது. இதன் காரணமாக தினமும் காலை, மாலை வேளையில் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சேதமடைந்த சாலையை சரிசெய்ய ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.