கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் டவுன் பஸ்கள் பயணிகளை இறக்கி செல்வதற்காக வழி உள்ளது. இந்த பகுதியில் சாலையில் இருபுறமும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்கள் செல்ல முடிவதில்லை. அந்த இடத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்த கூடாது என காவல் துறை சார்பில் அறிவிப்பு பலகைகள் வைத்த போதிலும், அதே பகுதியில் தொடர்ந்து நிறுத்தப்படுகின்றன. எனவே டவுன் பஸ்கள் செல்லும் சாலையில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுப்பிரமணியன், கிருஷ்ணகிரி.