புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை மடத்துக்கடை வீதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலின் அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கோவில் முன்பு உள்ள ஆட்டோ ஸ்டாண்டு பக்தர்களுக்கும், பயணிகளுக்கும் இடையூறாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆட்டோ ஸ்டாண்டை அருகில் உள்ள மீனாட்சியம்மன் கோவில் அருகே மாற்றியமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.