பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் பேருந்து

Update: 2024-12-29 17:44 GMT
செஞ்சி கூட்டுரோட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. ஆனால் அந்த வழியாக வரும் அனைத்து பஸ்களும் கூட்டுரோட்டிலேயே பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்கின்றன. இதனால் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் ஏமாற்றமடைந்து வருகின்றனர். மேலும் கூட்டுரோட்டில் பஸ்கள் நின்று செல்வதால் அங்கு அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்றுசெல்ல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி