அதிகரிக்கும் விபத்துகள்

Update: 2024-12-29 11:03 GMT

கோவை பாப்பநாயக்கன்பாளையம் என்.ஜி. ராமசாமி ரோடு பகுதியில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவை அங்குள்ள சாலையில் நடந்து செல்வோரை துரத்தி சென்று கடித்து வருகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் துரத்தி வருகின்றன. இதனால் இரவில் விபத்துகள் அதிகரித்து வருகிறது. எனவே அங்கு ெதருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி