சிதம்பரத்தில் இருந்து சேத்தியாத்தோப்பு வழியாக சோழத்தரம் வரை அரசு பஸ் ஒன்று காலை மற்றும் மாலை வேளைகளில் சென்று வருகிறது. அந்த பஸ் சோழத்தரம் அடுத்து 4 கி.மீ. தொலைவில் உள்ள புலியூர் வரை வந்து சென்றால் அக்கிராம மாணவர்களும் பயனடைவார்கள். எனவே பள்ளி மாணவர்களின் நலன் கருதி காலை மற்றும் மாலை மட்டும் புலியூர் வரை பஸ் வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.