புதுச்சேரியில் இருந்து அரியாங்குப்பம், தவளக்குப்பம், கொருக்கமேடு வழியாக ஆண்டியார்பாளையம் வரை செல்லக்கூடிய அரசு மினி பஸ் கடந்த சில நாட்களாக திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட மினி பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.