திருப்பூர் தாராபுரம் ரோடு அரண்மனைபுதூர் அரசு பள்ளி அருகில் மின் கம்பம் ஒன்று போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் உள்ளது மின்சாரவாரிய அதிகாரிகள் மின் கம்பத்தை அகற்றி சரி செய்ய வேண்டும். மேலும் திருப்பூர் 50 வது வார்டு, கரட்டான்காடு தாராபுரம் மெயின்ரோடு பகுதியில் கேபிள் லைன் பதிக்க தோண்டப்பட்ட குழி 10 நாட்களாக மூடப்படாமல் இருக்கிறது. இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதுடன் போக்குவரத்துக்கு இடையூராக இருக்கிறது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை உடனடியாக சரி செய்யவேண்டும்.
ராஜேந்திரன், திருப்பூர்.