கரூர் மாவட்டம், குந்தாணி பாளையம் நத்தமேடு அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் எதிரே நெடுஞ்சாலை தார் சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் பூசவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் வேகத்தடையில் சிக்கி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.