பஸ் வசதி வேண்டும்

Update: 2024-12-15 13:55 GMT
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இருந்து சின்னதாராபுரம் வரை வழியாக ஊத்தூர், மாலமேடு, அரிக்காரன்வலசு, வேளாம்பூண்டி, ஆயிக்கவுண்டன்பாளையம், சுண்டக்காம்பாளையம், ஒத்தமாந்துறை வழியாக அரசு நகர பஸ் காலை, மாலை இருநேரங்களிலும் இயங்கப்பட்டது. பின்னர் திடீரென அரசு நகர பஸ் இயக்கப்படவில்லை. இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் அந்த பஸ் காலை ஒருமார்க்கமாகவும், மாலை இருமார்கமாகவும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனா‌ல் அந்த பஸ்சை காலை நேரத்தில் சின்னதாராபுரத்தில் இருந்து மேற்கண்ட கிராமங்களின் வழியாக அரவக்குறிச்சி வரை மீண்டும் இயக்கினால் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்தபகுதியில் சுண்டக்காம்பாளையம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

மேலும் செய்திகள்