பஸ் நிலையத்துக்குள் உலா வரும் கால்நடைகள்

Update: 2024-12-15 11:00 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பஸ் நிலையத்தில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை போக்குவரத்துக்கு இடையூறாக நிற்பதால் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் சிரமத்துடன் வருகின்றன. கால்நடைகள் திடீரென பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளை முட்டச்செல்கின்றன. இதனால் பஸ்டிரைவர்களும், பயணிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கும்பகோணம் பஸ் நிலையத்தில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி