செயல்படாத சிக்னல் விளக்கு

Update: 2024-12-08 16:30 GMT

கந்திகுப்பத்தில் கிருஷ்ணகிரி-சென்னை, சென்னை- கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறங்களிலும் தானியங்கி சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவை தற்போது பழுதடைந்து பல மாதங்களாக செயல்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், சாலையை கடந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் சிரமம் அடைகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் பழுதடைந்துள்ள சிக்னல் விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணிகண்டன், பர்கூர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி