மதுரை தெற்கு வாசல் அருகே சின்னக் கடை வீதி தெற்கு மார்ட் சந்திப்பு பகுதியில் அதிகமாக செல்லும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் விபத்துகளும் அடிக்கடி நடக்கின்றன. எனவே போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.