பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2024-12-01 14:03 GMT

புதுக்கோட்டை மாவட்டம் பழைய ஆதனக்கோட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முன் சிதிலமடைந்து இருந்த பயணிகள் நிழற்குடை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த இடத்தில் மீண்டும் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் வெயில் மற்றும் மழை நேரத்தில் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்