பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, கொளக்காநத்தம் கிராமத்தில் சாலையின் குறுக்கே வேகத்தடை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வேகத்தடையானது உயரமாக அமைக்கப்பட்டு உள்ளதால், இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த வேகத்தடையில் மோதி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே பெரிய அளவிலான விபத்து நடைபெறும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.