அரவக்குறிச்சி அருகே கரடிபட்டியில் புறவழிச்சாலையும், கரூர் சாலையும் சந்திக்கும் இடத்தில் ஒரு வேகத்தடை உள்ளது. இதற்கு எச்சரிக்கை செய்வதற்காக விட்டு விட்டு எரியும் வகையில் ஒரு சிகப்பு விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு சாலையில் கரூர், அரவக்குறிச்சி, பள்ளபட்டி, திண்டுக்கல், தாராபுரம், பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் ஏராளமான கார், வேன், லாரி மற்றும் இரு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவப்பு விளக்கு நீண்ட நாட்களாக எரிவது இல்லை. இதனால் வேகமாக வரும் வாகனங்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் வந்து உடனடியாக பிரேக் அடிப்பதால் விபத்திற்குள்ளாகும் அபாயகரமான சூழ்நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.