சாலை தடுப்புகளால் வாகன ஓட்டிகள் அவதி
திருப்பூர் மாநகர சாலைகளில் குடிநீர் குழாய் உடைப்பு மற்றும் கழிவுநீர் கால்வாய் உடைப்பு ஏற்பட்டால் அவற்றை சீரமைக்காமல் அவற்றை அடையாளப்படுத்தும் விதமாக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குடிநீர் குழாய் உடைப்பை சீரமைத்து சாலையை சீரமைக்காமல் அதில் இரும்பு தடுப்புகள் அமைப்பதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுட்டு வருகிறது. இரவு நேரத்தில் இரும்பு தடுப்புகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே விரைவாக சாலைகளை சீரமைத்து இரும்பு தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கேட்டுக்கொள்கிறார்கள்.
-முத்துராமன், திருப்பூர்.