பஸ் நிலையத்திற்குள் வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2024-11-24 14:50 GMT

பஸ் நிலையத்திற்குள் வேகத்தடை அமைக்கப்படுமா?

பல்லடம் பஸ் நிலையத்தில், கோவை, திருச்சி, உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக பஸ் நிலையம் வந்து செல்கின்றனர். பல்லடம் பஸ் நிலையத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக்கிலான வேகத்தடை சிறிது, சிறிதாக, உடைந்துவிட்டது. தற்போது வேகத்தடை இல்லாததால், பஸ்கள் அதிவேகத்தில் வருவதால் விபத்துகள் ஏற்படுகிறது. தனியார் வாகனங்களும் அத்துமீறி பஸ் நிலையத்திற்குள் வருகின்றன. எனவே பஸ் நிலையத்தில் பழுதடைந்த வேகத்தடையை அகற்றிவிட்டு புதிதாக வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-குமார், பல்லடம்.

மேலும் செய்திகள்