பஸ் வசதி தேவை

Update: 2024-11-17 18:16 GMT

நாமக்கல் புதிய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இரவு நேரத்தில் புதிய பஸ் நிலையம் செல்ல போதுமான போக்குவரத்து வசதி இல்லை. இதனால் இரவு 10 மணிக்கு மேல் அனைத்து பஸ்களும் புதிய மற்றும் பழைய பஸ் நிலையம் வந்து சென்றால் சேலம், கரூர் வழியாக செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுபோல் கரூர் செல்லும் பஸ்கள் பழைய பஸ் நிலையம், கோட்டை சாலை வழியாக சென்றால் வசதியாக இருக்கும். எனவே இதனை நடைமுறை படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விசாலாட்சி, நாமக்கல்.

மேலும் செய்திகள்