சாலையில் தேங்கும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-11-11 10:00 GMT

சாலையில் தேங்கும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதி

 காலேஜ் ரோடு காவிலிப்பாளையம் பிரிவு சாலையில் உள்ள குடிநீர் குழாயில் சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதிலிருந்து வெளியேறும் தண்ணீர் குண்டும், குழியுமாக உள்ள சாலையில் தேங்குகிறது. இதனால் இரவு நேரத்தில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் குழி இருப்பது தெரியாமல் நிலைத்தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. எனவே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-குமார், காவிலிபாளையம்.

மேலும் செய்திகள்