கிருஷ்ணகிரி நகரில் சேலம் சாலை, சப்-ஜெயில் சாலை, பெங்களூரு சாலை, சென்னை சாலை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வேகத்தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. குறிப்பாக இந்த வேகத்தடைகளில் வெள்ளை நிற வர்ணம் பூசப்படாததால் இருசக்கர வாகன ஓட்டிகள் பலருக்கும் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகிறார்கள். ஆகவே இந்த வேகத்தடைகளை முறையாக பராமரிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சின்னத்தம்பி, கிருஷ்ணகிரி.