சேதமடைந்த தரைப்பாலம்

Update: 2024-10-27 17:48 GMT

சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ளது அங்காளம்மன் கோவில் தெரு. இந்த பகுதிக்கு செல்ல தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலத்தின் ஒரு பகுதி திடீரென சேதமாகி உள்ளது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள், வாகனங்கள் செல்ல அவதிக்குள்ளாகிறார்கள். சேதமான பகுதியில் மேல் பேரிக்காடு வைத்து தடுக்கப்பட்டுள்ளது. அங்கு ெசல்ல தரைப்பாலத்தின் ஒரு பகுதி மட்டும் வாகனங்களும், பொதுமக்களும் சிரமத்துடன் சென்று வருகிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி சேதமடைந்த தரைப்பாலத்தை சரிசெய்ய வேண்டும்.

-இனியவர்மன், வின்சென்ட்.

மேலும் செய்திகள்