ஆபத்தான வளைவு

Update: 2024-10-20 18:12 GMT

தா்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பொம்மிடி, மஞ்சவாடி ஆகிய பகுதிகள் தொடர் விபத்துகள் நடக்கும் இடங்களாக மாறி உள்ளன. இந்த நிலையில் சாமியாபுரம் கூட்ரோட்டில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டிக்கு வரும் வழியில் அமைந்துள்ள கிழங்கு மில் அருகே சாலை வளைவாக இருப்பதால் இந்த பகுதியில் வேகமாக வரும் வாகனங்கள் எதிரே வரும் வாகனங்கள் மீது மோதியும், சாலையோர மரங்களில் மோதியும் விபத்துகளில் சிக்குகின்றன. எனவே அதிகாரிகள் வளைவு பகுதியில் அறிவிப்பு பலகை அமைத்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஷ்வா, தர்மபுரி.

மேலும் செய்திகள்