கிருஷ்ணகிரி பழைய பஸ் நிலையத்தில் இருந்து காவேரிப்பட்டணம், பர்கூர், வேப்பனப்பள்ளி, சூளகிரி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த டவுன் பஸ்கள் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ரவுண்டானா அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி செல்கின்றன. குறிப்பாக ரவுண்டானா அருகில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ்கள் உடனே செல்லாமல் அந்த பகுதியில் நீண்ட நேரம் நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பலரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அதே போல பகல் நேரத்தில் சரக்கு வாகனங்கள் வந்து சரக்குகளை இறக்குவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், கிருஷ்ணகிரி.