கிருஷ்ணகிரியில் இருந்து எம்.டி.வி. நகர், வெண்ணம்பள்ளி, எலத்தகிரி, கந்திகுப்பம் வழியாக பர்கூருக்கும், அங்கிருந்து ஜெகதேவி, அத்திகானூர், போச்சம்பள்ளி மற்றும் பர்கூரில் இருந்து காரகுப்பம், சிந்தகம்பள்ளி, பசவண்ண கோவில், குருவிநாயனப்பள்ளி, காளி கோவில் வழித்தடத்தில் டவுன் பஸ் ஒன்று இயக்கப்பட்டது. இந்த பஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. தற்போது மேற்கண்ட ஊர்களில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு சென்று வர மாணவ, மாணவிகள் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் நிறுத்தப்பட்ட டவுன் பஸ்சை மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சசிபாபு, கிருஷ்ணகிரி