போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2024-10-13 17:16 GMT

நாமக்கல் முதலைப்பட்டியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் ஒன்று உள்ளது. அதன் அருகில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சென்று வருவதற்கு வசதியாக சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையின் தரம் பாதிக்கப்படுவதுடன், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து, சர்வீஸ் சாலையில் தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுகுமார், நாமக்கல்.

மேலும் செய்திகள்