கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூருக்கு பகல் நேரத்தி்ல் போதிய அளவு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் கிருஷ்ணகிரி - ஓசூர் இடையே உள்ள மருத்துவ கல்லூரி, குருபரப்பள்ளி, சூளகிரி உள்பட பல பகுதிகளில் நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றி செல்கிறார்கள். அதே நேரத்தில் இரவு 9 மணிக்கு மேல் கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூருக்கு செல்லும் அரசு பஸ்களில் பெரும்பாலான பஸ்கள் இடைப்பட்ட ஊர்களில் பயணிகளை இறக்குவதில்லை. இதனால் இரவு 8 மணி முதல் காலை 4 மணி வரை கிருஷ்ணகிரி-ஓசூர் இடையே உள்ள ஊர்களை சேர்ந்த மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே இரவு நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு அனைத்து ஊர்களிலும் நின்று செல்ல கூடிய வகையில் ஒரு பஸ்சாவது இயக்கிட போக்குவரத்து கழகம் முன்வர வேண்டும்.
-தினேஷ், சூளகிரி.