சூளகிரியில் இருந்து பெத்தசிகரலப்பள்ளி கிராமத்திற்கு டவுன் பஸ் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பஸ் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்துள்ளது. அதாவது இந்த வழித்தடத்தில் சுமார் 33 கிலோமீட்டர் தூரம் இந்த பஸ் செல்கிறது. இந்த பஸ்சின் மேற்கூரை சேதமடைந்து மழை நீர் பயணிகள் மீது விழுகிறது. எனவே சேதமடைந்த பஸ்சை புதுப்பிக்கவும் அல்லது புதிய பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.