கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி நகரின் மையப்பகுதியில் பஸ் நிலையம் அமைந்துள்ளது. ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி தர்மபுரி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களும், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஓசூர், பெங்களூருவுக்கு செல்லும் பஸ்களும் சூளகிரி பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றன. காலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த பஸ் நிலைய வளாகத்திற்குள் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் சிலர் இரு சக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டி செல்கிறார்கள். எனவே பஸ் நிலையத்துக்குள் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டி செல்லும் நபர்கள் மீது சூளகிரி போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
-வருண், சூளகிரி.