வாகன ஓட்டிகள் அவதி
திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தை சுற்றி பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க பொதுமக்கள் பலர் இந்த பகுதிக்கு வந்து செல்கிறார்கள். பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் புதுமார்க்கெட் ரோட்டில் ஏராளமான ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளன. ஆனால் இந்த சாலை குண்டும்குழியுமாகவும், ஆங்காங்கே ஜல்லிகற்கள் சிதறி கிடப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். கடந்த நில நாட்களாக மழை பெய்து வருவதால் அந்த சாலை முழுவதும் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வாகனங்கள் வரும்போது பாதசாரிகள் மற்றும கடைகள் மீது தண்ணீரை வாரி இறைத்தபடி செல்லும் நிலைஉள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கணேசன், திருப்பூர்.