வாகனங்களால் அவதி

Update: 2024-09-29 17:10 GMT

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலைய வளாகத்திற்குள் ஏராளமான இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ் நிலையத்திற்குள் வரும் பயணிகள் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக டவுன் பஸ்கள் வரக்கூடிய பாதையில் இரு பகுதிகளிலும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பஸ்கள் வர சிரமப்படுகின்றன. அந்த பகுதியில் இரு சக்கர வாகனங்களை நிறுத்த கூடாது என்று காவல் துறை சார்பில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்ட போதிலும், தொடர்ந்து அதே இடத்தில் நிறுத்தப்படுகின்றன. எனவே பஸ் நிலைய வளாகத்திற்குள் இரு சக்கர வாகனங்களை நிறுத்த தடை செய்ய அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகேசன், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி