சாத்தான்குளம் பஜார் வழியாக உடன்குடி செல்லும் சாலையில் காலை, மாலையில் அதிக வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே குறுகலான சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.