அதிவேகமாக செல்லும் டிப்பர் லாரிகள்

Update: 2024-09-22 17:21 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து உத்தனப்பள்ளி செல்லும் சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகள் ஜல்லிகற்கள் மற்றும் எம்.சாண்ட் மணல் ஏற்றி கொண்டு செல்கின்றன. இதில் பெரும்பாலான லாரிகள் அதிவேகமாக செல்வதால் இரு சக்கர வாகன ஓட்டிகள், ெபாதுமக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. ஜல்லிகற்களை பாதுகாப்பற்ற முறையில் லாரிகளில் எடுத்து செல்வதால் சாலை முழுவதும் ஜல்லிகற்கள் கொட்டி காணப்படுகின்றன. எனவே அதிகாரிகள் இத்தகைய லாரிகளை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முனிராஜ், சூளகிரி.

மேலும் செய்திகள்