இரவு பஸ் வசதி

Update: 2024-09-22 17:12 GMT

கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதிகளில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் பெரும்பாலானவை இரவு நேரங்களில் கிருஷ்ணகிரி, ஓசூரை சுற்றி உள்ள கிராம பகுதிகளில் நிறுத்தப்படுவதில்லை. பயணிகளை தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி செல்ல கூட பெரும்பாலான டிரைவர்கள் மறுக்கிறார்கள். குறிப்பாக பர்கூர், அரசு மருத்துவ கல்லூரி, சூளகிரி உள்பட பல பகுதிகளுக்கு செல்லும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே தேசிய நெடுஞ்சாலையோரமாவது இரவு நேரத்தில் பஸ்கள் பயணிகளை இறக்கி விட்டு செல்ல போக்குவரத்து கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சதீஷ்குமார், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்