பயணிகள் நிழற்குடை மாற்றப்படுமா?

Update: 2024-09-08 11:18 GMT
கரூர் மாவட்டம் குந்தாணி பாளையம் அருகே ஆசாரிபட்டறை என்ற பகுதியில் அந்தப் பகுதி பொதுமக்களின் நலன் கருதி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. மழை மற்றும் வெயில் காலங்களில் அந்தப் பகுதி பொதுமக்களின் பயணத்திற்கு மிகவும் உதவிகரமாக இருந்து வந்தது. இந்நிலையில் நிழற்குடையில் கங்கிரீட்டுகள் சிலமடைந்து அவ்வபோது கீழே விழுந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பயணிகள் நிழற்குடையை அகற்றி விட்டு புதிய நிழற்குடை கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி