கிருஷ்ணகிரியில் இருந்து ஆலப்பட்டி வழியாக தொட்டிபள்ளம் வரை அரசு பஸ் காலை, மாலை வேளைகளில் இயக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் மற்றும் வெளியூர் செல்லும் பயணிகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் அதே வழித்தடத்தில் மீண்டும் பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லேகமித்ரா, ஆலப்பட்டி.