கிருஷ்ணகிரி அரசு பணிமனையில் இருந்து இயக்கப்படும் நகர பஸ் ஒன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பர்கூரில் இருந்து புறப்பட்டு நேரலப்பள்ளி, கொண்டப்ப நாயனப்பள்ளி, சாப்பமுட்லு, பாகிமானூர் வழியாக கிருஷ்ணகிரிக்கு இரவில் வந்தடையும். இந்த பஸ்சில் அதிகளவில் பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் பயணித்து வந்தனர். ஆனால் அந்த வழித்தடத்தில் தற்போது நகர பஸ் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் அதே வழித்தடத்தில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வினோத், கிருஷ்ணகிரி.