சேலத்தில் இருத்து ஜங்ஷன் செல்லும் பஸ்கள் ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விடுவது வழக்கம். தற்போது அங்கு பஸ் நிறுத்தம் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால் பயணிகளை ஏற்றி, இறக்க பஸ்கள் சாலையின் நடுவே நிற்கின்றன. இதனால் ஜங்ஷன் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு பின்னால் வரும் இரு சக்கர வாகனங்களும் பஸ்கள் சாலையின் நடுவே நிற்பதால் சிறு சிறு விபத்துக்களில் சிக்குகின்றன. எனவே பயணிகள், வாகன ஓட்டிகளின் கோரிக்கை ஏற்று பஸ் நிறுத்த விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
-அன்பரசன், சேலம்.