ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி 6 வழிச்சாலையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வருகின்றன. இந்த சாலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான வாலிபர்கள் `பைக் ரேஸ்' செல்கிறார்கள். குறிப்பாக பெங்களூரு பகுதியில் இருந்து அதிக சத்தம் எழுப்ப கூடிய வாகனங்களில் தேசிய நெடுஞ்சாலையில் செல்வதால், பிற வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறாகவும், அச்சமும் ஏற்படுகிறது. இவ்வாறு `பைக் ரேஸ்' செல்லும் வாலிபர்கள் அடிக்கடி விபத்தில் உயிர் இழந்தாலும், தொடர்ந்து `பைக் ரேசில்' ஈடுபட்டு வருகிறார்கள். எனவே தேசிய நெடுஞ்சாலையில் முக்கியமான சந்திப்பு இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு ரேஸ் செல்லும் வாகன ஓட்டிகளின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும்.
-வினோத், கிருஷ்ணகிரி.