நேரத்திற்கு வராத அரசு பஸ்

Update: 2024-08-04 11:34 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள வட்குத்தொண்டைமான்ஊரணி கிராமத்திற்கு புதுக்கோட்டையில் இருந்து 4ஏ என்ற நகர பஸ் காலை, மாலை என இரு வேளை வருகின்றது. காலையில் 7.30 மணிக்கு வரக்கூடிய நகர பஸ் 6.55, 7 மணிக்கெல்லாம் வந்து விடுகின்றது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்