பஸ் வசதி வேண்டும்

Update: 2024-08-04 11:17 GMT

சங்கரன்கோவிலில் இருந்து திருவேங்கடம் வழியாக கோவில்பட்டிக்கு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் சங்கரன்கோவில்-திருவேங்கடம் செல்லும் சாலையில் அமைந்துள்ள களப்பாகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, நாரணாபுரம், ஒடப்பன்குளம், கரிசல்குளம் சத்திரகொண்டான் பகுதி மக்கள் கோவில்பட்டிக்கு செல்ல வேண்டுமெனில் சங்கரன்கோவில் சென்றுதான் பயணம் செய்து வருகிறார்கள். எனவே சங்கரன்கோவில் இருந்து திருவேங்கடம் வழியாக கோவில்பட்டிக்கு அரசு பஸ்கள் இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்