கோவிலுக்கு பஸ் வசதி

Update: 2024-07-21 18:18 GMT

கொல்லிமலையின் கிழக்கு பகுதி அடிவாரத்தில் ஒட்டடி பெரியசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்தநிலையில் பள்ளி விடுமுறை நாட்களில் முத்துகாப்பட்டியில் இருந்து வழக்கமாக பெரியசாமி கோவிலுக்கு சென்று வரும் அரசு பஸ்கள் சரிவர இயங்குவதில்லை. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வருகின்றனர். எனவே கோவிலுக்கு சென்று வர அதிகாரிகள் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

-ராமசாமி, முத்துகாபட்டி.

மேலும் செய்திகள்