தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலைய பகுதியில் அனுமதியின்றி லாரிகள், பள்ளி வாகனங்களை நிறுத்துவதால் பயணிகளுக்கும், பஸ்களுக்கும் இடையூறாக உள்ளது. மேலும் இரவு நேரங்களில் நிறுத்தப்படும் லாரிகள் காலையில் அதிவேகமாக பஸ் நிலைய வளாகத்தில் இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் ஒருவித அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே அதிகாரிகள் விரைந்து பஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்படும் லாரிகள், பள்ளி வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குணா, மாரண்டஅள்ளி.